Thiruppavai திருப்பாவை |
(Visit
thiruppavai.swayamvaraparvathi.com for Audio with lyrics in Tamil and
English) |
Thaniyan |
|
Anna vayaRpudhuvai aandaaL arangaRkup |
அன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப் |
Pannu thiruppaavaip palpadhiyam, Innisaiyaal |
பன்னு திருப் பாவைப் பல் பதியம்! - இன்னிசையால் |
paadikkoduththaaL naRpaamaalai, Poomalai |
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை |
Soodikk koduththaaLaich sollu |
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு! |
Soodik koduththa sudark kodiyE, tholpaavai |
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, தொல்பாவை |
Paadi aruLavalla palvaLaiyaai - Naadi Nee |
பாடி அருள வல்ல பல் வளையாய் - நாடி நீ |
VengadavaRku ennai vidhi onRa immaaRRam |
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம் |
Aangadavaa vaNNamE nalgu |
நாங் கடவா வண்ணமே நல்கு! |
|
|
Thiruppavai in English |
Thiruppavai in Tamil (திருப்பாவை) |
1. Margazhi Thingal or Margali Thingal |
1. மார்கழித் திங்கள் |
Maargazhi-th thingal madhiniraindha nannalal |
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்! |
Neeradap pothuveer pothumino nerizhayeer! |
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! |
Seermalgum aaipadi selvachirumeergal |
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! |
Kooerval kodum thozhilam Nandagopan kumaran |
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் |
Er aarndha kanni Yosadai ilam singam |
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் |
Kaar mein-ch-chengan kadhir madhiyam pol mukathan |
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான் |
Narayanane namakke parai tharuvaan |
நாராயணனே நமக்கே பறை தருவான் |
Paaror pugazha-p-padindul-el or empaavaai |
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் |
|
|
2. Vaiyathu Vazhvirgal |
2. வையத்து வாழ்வீர்காள்! |
Vaiyathu Vaazhveerkaaal! Naamum nam paavaiku |
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் |
Seyyum kirisaigal keleero paar-k-kadalul |
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் |
Payya-th-thuyinra parama adi paadi |
பையத் துயின்ற பரமனடி பாடி |
Ney-unnom paal unnom! Naatkaale neeraadi |
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி |
Mai-ittu ezhuthom, malar ittu naam mudiyom |
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம் |
Seyyaadana seyyom; thee kuralai senrodhom |
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் |
Aiyamum pichayyum aanthanayyum kaikaati |
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி |
Uyyumaaru enni uganthu-el or em paavaai. |
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். |
|
|
3. Oongi ulagalandha |
3. ஓங்கி உலகளந்த |
Ongi ulagalanda uthaman per paadi |
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி |
Naangal nam paavaiku chaatri neeradinaal |
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் |
Theenginri nadellaam thingal mummaari peidu |
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து |
Ongu peru sennal oodu kayal ugala |
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப் |
Poomkuvalai-p-podhil porivandu kannpaduppa |
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத் |
Thengaade pukkirundu seertha mulai patri |
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி |
Vaanga-k-kudam niraikkum vallal perum pasukkal |
வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் |
Neengade selvam niraindhu-el or em paavaai. |
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். |
|
|
4. Azhi mazhai kanna |
4. ஆழிமழைக் கண்ணா |
Aazhi mazhai kanna! Onrum nee kai karavel |
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல் |
Aazhiyul pukku mugundhu koda aathu, ari |
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி |
Oozhimudalvan uruvam pol mei karuthu |
ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப் |
Paazhi am tholudai Padmanabhan kaiyil |
பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில் |
Aazhipol minni valampuripol minru adhirndhu |
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து |
Thaazhaade Sarngaam udhaitha saramazhai pol |
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல் |
Vaazha ulaginil peidhidaai; naangalum |
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் |
Maargazhi neerada magizhndu-el or em paavaai. |
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். |
|
|
5. Mayanai |
5. மாயனை |
Maayanai mannu vada Madhurai maindhanai |
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் |
Thuyao-peruneer Yamunai-t-thuraivanai |
தூய பெருநீர் யமுனைத் துறைவனை |
Aayar kulathinil thonrum mani vilakkai |
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத் |
Thaayai kudal vilakkam seida Dhamodharanai |
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் |
Thooyomaai vandhu naam thoomalar thoovi-t-thozhudhu |
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது |
Vaayinaal paadi manatthinaal sendhikka |
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் |
Poya pizhayum pugutharuvaan ninranavum |
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் |
Theeyinil thoosaakum seppu-el or empaavaai |
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். |
|
|
6. Pullum Silambina kaan |
6. புள்ளும் சிலம்பின காண் |
Pullum sillambina kaan; pull araiyan koilil |
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில் |
Vellai vili sangin peraravam kettilaiyo |
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? |
Pillaai! ezhundirai peymulai nanjundu |
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு |
Kalla-ch-chakatam kalallazhi-k-kaalochi |
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி |
Vellathu aravil thuyil amarandha vithhinai |
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை |
Ullathuk kondu munivarkalum yogikalum |
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் |
Mella ezhundu 'Hari' enra per aravam |
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் |
Ullam pukundhu kulirndhu-el or empaavaai |
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். |
|
|
7. Kichu Keechendrm |
7. கீசுகீசு என்றும் |
Keechu keechu enru engum aanauchaathan kalandhu |
கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து |
Pesina Pecharavam kettilyo peyppennay! |
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! |
Kaasum pirappum kalakalapp-k-kai perthu |
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து |
Vaasanarumkuzhal aaichiar maththinaal |
வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் |
Osaipadutha thayir aravam kettilayo? |
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ? |
Nayaka-p-penn pillai! Naarayanan moorthy |
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி |
Kesavanai-p-paadavum nee kette kidaththiyo! |
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ? |
Thesamudayai Thirav-el or empaavaai |
தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய். |
|
|
8. Kizh vaanam vellendru |
8. கீழ்வானம் வெள்ளென்று |
Keezh vaanam vellendru! erumai siru veedu |
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு |
Meyvaan paranthana kan! mikkulla pillaikalum |
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் |
Poovan pokinraarai-popokaamal kaathu unnai-k |
வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக் |
Koovuvaan vandhu ninrom! kothu kalamudaya |
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய |
Paavaai! ezhunthiraai! paadi-p-parai kondu |
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு |
Maavai-p-pilanthaanai, mallarai maatiya |
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய |
Devaathi dhevanai chenrunaam sevithal |
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் |
Aa Aaa enru aaraindhu arul-el or empaavaai |
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய். |
|
|
9. Thoomani Maadathu (thumani madathu) |
9. தூமணி மாடத்து |
Thoomani maadathu sutrum vilakkeriya |
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் |
Dhoopam kamazha thuyil anai mel kann valarum |
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் |
Maamaan magale! mani-k-kadavam thaalthiravaai! |
மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய் |
Maameer! Avalai ezhuppeero! Un magal thaan |
மாமீர்! அவளை எழுப்பீரோ?* உன்மகள்தான் |
Oomayo? anri-ch-chevido? ananthalo? |
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ? |
Ema-p-perum thuyil manthira-p-pattalo? |
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? |
Maa maayan, Maadhavan, Vaikuntan, enrenru |
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று |
Naamam palavum navinru-el or empaavaai |
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய் |
|
|
10. Notru suvargam |
10. நோற்றுச் சுவர்க்கம் |
Notru Suvargam puguginra ammanai! |
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! |
Maatramum thaaraaro vaasal thiravaadaar |
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார் |
Naatrathuzhaai mudi Naraayana: nammaal |
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் |
Potra-p-parai tharum punniyanal pandorunaal |
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள் |
Kootrathin Vaai veezhnda Kumbakarananum |
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் |
Thotrum unakke perum thuyilthan thandhaano |
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? |
Aatra ananthal udayaai! arumkalame |
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! |
Thetramaai vandhu thira-el or empaavaai |
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். |
|
|
11. Katru karavai |
11. கற்றுக் கறவை |
Katru-k-karavai kanangal pala karandhu |
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து |
Setrar thiral azhiya-ch-chenru seru-ch-cheyyum |
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் |
Kutram onrlladha kovalar tham porkodiye |
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே! |
Putraravu algul punamayile! podharaai! |
புற்றுஅரவு அல்குல் புனமயிலே! போதராய் |
Sutrathu thozimaar ellarum vandu nin |
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் |
Mutram pugundhu mugil vannan perpaada |
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட |
Sitraadhe pesaade selva-p-pendaatti nee |
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி! நீ |
Etrukku urangum porul?-el or empaavaai |
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். |
|
|
12. Kanaithilam Katrerumai |
12. கனைத்திளம் கற்றெருமை |
Kanaithu ilam katrerumai kanrukku irangi |
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி |
Ninaithu mulai vazhiye ninru paal sora |
நினைத்து முலை வழியே நின்று பால்சோர |
Nanaithu illam serarkkum narchelvan thangaai! |
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் |
Panithalai veezha nin vaasal kadai-patri |
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச் |
Sinathinaal then ilangai-k-komaanai-ch-chetra |
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற |
Manaththukkiniyaanai paadavum nee vaaithiravaai! |
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய் |
Iniththan ezhundiraai, eethenna peruakkam! |
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்! |
Anaithu illaththuaarum arindhu-el or empaavaai |
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். |
|
|
13. Pullinvai keendanai |
13. புள்ளின் வாய் கீண்டானைப் |
Pullinvaai keendaanai-p-pollar arakkanai |
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் |
Killikkalainthaanai-k-keerthimai paadi-p-poi |
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் |
Pillaikal ellarum paavai-k-kalam pukkaar |
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் |
Velli ezhundhu viyazham urangitru |
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று |
Pullum silambina kaan podhari-k-kanninaai! |
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்! |
kullak-kulira-k-kudaindhu neeraadaathe |
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே |
Palli-k-kidathiyo! Paavaai Nee nannaalaal |
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால் |
Kallam thavirundhu kalandhu-el or empaavaai |
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். |
|
|
14. Ungal puzhakkadai |
14. உங்கள் புழக்கடை |
Ungal puzhai-k-kadai-th-thottathu vaaviyul |
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் |
Sengazhuneer vaai negizhndhu aambal vaai koombina kaan |
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் |
Sengal podi-k-koorai vennpal thavathavar |
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர் |
Thangal thirukkoil sangiduvaan poginraar |
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் |
Engalai munnam ezhuppuvaan vaai pesum |
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் |
Nangaai! Ezhundiraai! Naanaadhai! Naavudayai! |
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்! |
Sangodu chakkaram endhu thadakkaiyan |
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் |
Pangaya-k-kannanai-p-paadu-el or empaavaai |
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். |
|
|
15. Elle Ilam Kiliye |
15. எல்லே இளம்கிளியே |
Ellay! Illam Kiliye! Innam urungudhyo! |
எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ? |
Chill enru azhayen min Nangaimeer! Podharukinren |
சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன் |
Vallai un katturaikal pande un vaai arithum |
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும் |
Valleergal neengale! Naanthan aayiduga! |
வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக |
ollai nee podaai, unakkenna verudayai |
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை |
Ellarum pondhaaro? Pondhaar pondhu ennikkol |
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள் |
Vallaanai-k-konraanai, maatraarai maatrazhikka |
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க |
Vallaanai Mayanai-p-paadu-el or empaavaai |
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய். |
|
|
16. Nayaganai ninra |
16. நாயகனாய் நின்ற |
Naayaganai ninra Nadagopanudaya |
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய |
Koil Kaappaane! Kodi thonrum thorana |
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண |
Vaayil kaappaane! Mani-k-kadavam thal thiravaai |
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் |
Aayar sirumiyaromukku arai parai |
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை |
Maayan Manivannan, nennale vaai nerndhaan! |
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் |
Thooyomaai vandhom, thuyil ezha-p-paaduvaan |
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான் |
Vaayal munnam munnam maatraadhe amma! Nee |
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ |
Neyanilai-k-kadhavam neeku-el or empaavaai |
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். |
|
|
17. Ambarame Thannere |
17. அம்பரமே தண்ணீரே |
Ambaramay, thanneeray, soray aram seyyum |
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் |
Emperumaan! Nandagopaala! Ezhundhiraai! |
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்! |
kombanaar-k-kellam kozhunday kulavilakkay |
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே! |
Emperumaatti! Yosodhaai! Arivuraai! |
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய் |
Ambaran oodaruththu ongi ulagalandha |
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த |
Umberkomanne! Urangaadhu ezhundhiraai! |
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய் |
Semborkk-kazhaladi-ch-chelvaa! Baladeva! |
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! |
Umbiyum neeyum urang-el or empaavaai |
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய். |
|
|
18. Undhu madhakalitran |
18. உந்துமத களிற்றன் |
Undhu madhakalitran, odhaadha thol valiyan |
உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன் |
Nandagopalan marumagale! Nappinnai! |
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்! |
Gandham kamazhum kuzhalee! Kadai thiravaai? |
கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய் |
Vandhengum kozhi azhaithana kaann! Maadhavi-p- |
வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் |
Pandalmel palkaal kuyilinangal koovina kaan |
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் |
Pandhaar virali! Un maiththunan per paada-ch- |
பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச் |
Chenthaamarai-k-kaiyaal seeraar valai olippa |
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப |
Vandhu thiravaai magizhundhu-el or empaavaai |
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். |
|
|
19. Kuthu Vilakeriya (Kuthu vilakku Eriya) |
19. குத்து விளக்கெரிய (குத்து விளக்கு எரிய) |
Kuthuvilakkeriya-k-kottukkaal kattil mel |
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் |
Methnra pancha sayanathin meleri |
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் |
Koththalar Poonkuzhal Nappinnai kongaiymel |
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் |
Viththu kidantha malar maarbha! vaai thiravaai! |
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் |
Maiththadam kanninnaai, nee un manaalanai |
மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை |
Ethanai podhum thuyilezha vottaai kaan |
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் |
Ethanai elum pirivaatrakillaaiyaal |
எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால் |
Thathuvamanru thagav-el or empaavaai |
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய். |
|
|
20. Muppathu Moovar (Muppathu muvar) |
20. முப்பத்து மூவர் |
Muppaththu moovar amarar-ku-munsenru |
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று |
Kappam thavirkkum kaliye! Thuyilezhaai! |
கப்பம் தவிர்க்கும் கலையே! துயிலெழாய் |
Seppamudayaai! Thiraludayaai! Settraarku |
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு |
Veppam kodukkum vimalaa! Thuyilezhaai! |
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய் |
Seppanna menmulai-ch-chevvaai-ch-chirumarungal |
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் |
Nappinnai nangaai!Thiruvey! Thuyilezhaai! |
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் |
Ukkamum thattoliyum thanthun manaalanai |
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை |
Ippothe emmai neer att-el or empaavaai |
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய் |
|
|
21. Etra Kalangal |
21. ஏற்ற கலங்கள் |
Yetra kalangal ethir pongi meethalippa |
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப |
Maatraadhe paal soriyum vallal perum pasukkal |
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் |
Aatra-p-padaithaan magane! arivuraai! |
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் |
Uuttramudayaai!Periyaai! Ulaginil |
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் |
Thotramaai ninra sudare! thuzhilezhaai! |
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் |
Maatraar unakku valitholaindhu un vaasarkann |
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் |
Aatraathu vandhu unnadi paniyumma poley |
ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே |
Pottriyaam vandhom pugazhndu-el or empaavaai |
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய். |
|
|
22. Anganmaa Gnalathu |
22. அங்கண்மா ஞாலத்து |
Anganmaa gnaalaththarasar abhimaana |
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான |
Bangamaai vandhu nin palli-k-kattil keezhay |
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே |
Sangam iruppaar pol vandhu thalaip-peydhom |
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம் |
Kinkini vaai seidha thaamarai poo-p-poley |
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே |
Sengansiru-ch-chiridhey emmel vizhiyaavo! |
செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ? |
Thingalum aadhityanum ezhundaar pol |
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் |
Angann irandum kond engal mel nokkudhiyel |
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் |
Yengal mel shaapam nirandhe-el or empaavaai |
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் |
|
|
23. Maari malai muzhanjil |
23. மாரி முலை முழஞ்சில் |
Maarimalai muzhainjil manni-k-kidandhurangum |
மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் |
Seeriya Singam arivuttru-th-thee vizhiththu |
சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து |
Verimayirponga eppaadum perndhthari |
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி |
Moori nimirndhu muzhangi-p-purappattu |
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் |
Podharuma poley nee poovai-p-poovanna! Un |
போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன் |
Koil ninru ingane pondharuli koppudaya |
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய |
Seeriya singaadhanath-thirundhu yam vandha kaariyam |
சீரியசிங்கா சனத்திருந்த யாம் வந்த |
Aaraindhu arul-el or empaavaai |
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய் |
|
|
24. Anru ivvulagam |
24. அன்று இவ்வுலகமளந்தாய் |
Anru ivvulagam alandhaai adi potri! |
அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி |
Senru angu then ilangai settrai! thiral potri! |
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி |
Ponra-ch-chakatam udaiththaai pugazh potri! |
பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி |
Kanru kunilaai erindhaai! kazhal potri! |
கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி |
Kanru kudayaai eduthaai gunam potri! |
குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி |
Venru pagai kedukkum nin kaiyil vel potri! |
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி |
Enrenru un sevakame eththi-p-parai kolvaan |
என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் |
Inru yaam vandhom irangu-el or empaavaai |
இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய் |
|
|
25. Oruthi Maganai Pirandhu |
25. ஒருத்தி மகனாய் |
Oruththi maganaai-p-pirandhu or iravil |
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் |
Oruththi maganaai oliththu valara |
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் |
Tharikkilaanaagi-th-thaan theengu ninaindha |
தரிக்க்ல னாகித் தான் தீங்கு நினைத்த |
Karuththai pizhai-p-piththu kanjan vayittril |
கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில் |
Neruppenna ninra nedumaley! unnai |
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை |
Aruththuthu vandhom parai tharudhi yaagil |
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில் |
Thiruththakka selvamum sevakamum yaampaadi |
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி |
Varuththamum theerndhu magizhndhu-el or empaavaai |
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் |
|
|
26. Maaley! Manivanna!! |
26. மாலே! மணிவண்ணா!! |
Maaley! Manivanna! Maargazhi neeraaduvaam |
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் |
Melaiyaar seivanangal venduvana kettliyel |
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் |
Gnalath-thai ellam nadunga muralvana |
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன |
Paalanna Vannathu un Paanchajanyamey |
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே |
Polvana sangangal poi-p-paadu udaiyanave |
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே |
Saalap-preum paraiyey pallaandu isaipparey |
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே |
Kola vilakkey kodiyey vidhaaname |
கோல விளக்கே கொடியே விதானமே |
Aalin ilayai! arul-el or empaavai |
ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய். |
|
|
27. Koodadarai vellum (Kudarai vellum) |
27. கூடாரை வெல்லும் |
Koodaarai vellum seer Govinda! Unrannai |
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப் |
Paadi-p-paraikondu yaamperu sammaanam |
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் |
Naadu pugazhum parisinaal nanraaga |
நாடுபுகழும் பரிசினால் நன்றாக |
Choodagame thol valaye thoday sevi-p-poovay |
சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே |
Paadagame enranaya palkalanum yaam anivom |
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம் |
Aadai uduppom adhanpinnay paar choru |
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு |
Mooda nei peidhu muzhangai vazhivaara- |
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் |
Koodi irundhu kulirndhu-el or empaavaai |
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். |
|
|
28.Karavaigal Pin Chenru |
28. கறவைகள் பின்சென்று |
Karavaigal pinsenru gaanam serndhu unbhom |
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் |
Arivonrum illaadha aai-kulaththu unrannai |
அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை |
Piravi Perunthanai punniyam yaamudaiyom |
பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்; |
Kurai onrum illadha Govindaa! Un rannodu |
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு |
Uravel namakku ingu ozhikka ozhiyaadhu |
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது |
Ariyaadha pillaikalom anbinaal unrannai |
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் |
Siruper azhaiththanavum seeri arulaadhe |
சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே; |
Iraivaa! Nee thaaraai parai-el or empaavaai |
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். |
|
|
29. Chitram Chiru Kale |
29. சிற்றஞ் சிறுகாலே |
Sittran sirukaale vandhu unnai seviththu un |
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன் |
Pottraamarai adiye pottrum porul kelaai |
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய் |
Pettram mayththunnum kulaththil pirandhu nee |
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ |
Kuttreval engalai kollamal pogaathu |
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது |
Ittrai parai kolvaan anru kaann Govindaa! |
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! |
Ettraikkum azh-azh piravikkum un thannoda |
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு |
Uttrome yaavom unakke nam aatcheivom! |
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் |
Mattrai nam kaamangal maattru-el or empaavaai |
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் |
|
|
30. Vanga Kadal Kadanthu |
30. வங்கக் கடல் கடைந்த |
Vanga-k-kadal kadaindha maadhavaani kesavanai |
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை |
Thingal thirumugathu seyzhayaar senru irainji |
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி |
Anga-p-paraikonda aattrai ani puduvai |
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை |
Painkamala thanntheriyal pattar piraan kothai sonna |
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன |
Sangath-thamizhmaalai muppadum thappaame |
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே |
Ingi-p-parisuraippaar eerirandu maalvarai-th-thool |
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள் |
Senkam thirumugaththu selvaththirumaalaal |
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால் |
Engum thiruvarul petru inburuvar empaavaai |
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய் |
|
|
Kothai Piranthavoor Govindan VaazhumUr
|
கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர் |
SothimaNi maadam thOnrumUr --neethiyAl |
சோதி மணிமாடந் தோன்றுமூர் - நீதியால் |
nalla patthar vaazhumUr nAnn maRaihaLOthumUr |
நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர் |
VilliputthUr VedakkOnUr |
வில்லிபுத்தூர் வேதக் கோனூர். |
Paathahangal theerkkum Paramandi Kaattum
|
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் |
vedam anaitthukkum vithAhum- Kothai Tamizh |
வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ் |
Iyainthumainthum aRiyAtha maanidarai |
ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை |
vyaam sumappathum vampu |
வையம் சுமப்பது வம்பு |
ThiruvAdippUratthu sehatthuthitthAL VaazhiyE
|
திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே |
ThiruppAvai muppathum seppinAL VaazhiyE |
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே |
PeriyAzhwAr peRReduttha peNN piLlai vaazhiyE |
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே |
PerumbhUthUr mmamunikkup-pinnAnAL vaazhiyE |
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே |
oru NooRRu nARpatthu moonRu uraitthAL vaazhiyE |
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தால் வாழியே |
UyarangarkkE kaNNIuhanthaLitthAl VaazhiyE |
உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே |
maruvAruntirumalli vaLa naadi vaazhiyE |
மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே |
van Puthuvai naharkkOthai malarpadhangal VaazhiyE |
வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே |